மின்தடை: உங்க பகுதி இருக்கா?

Published:

eb - 2026

தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பாரமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜனவரி 25, 2022 ம் தேதி சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்..
புதுதாங்கல் :
முல்லைநகர் த.நா.வீ.வா, குடியிருப்பு, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், சாய் நகர், ரெட்டியார் பாளையம், பாரதிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் / விருகம்பாக்கம் :
கே.கே நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாய்நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இதனால் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும் படியும் மதியம் 2 மணிக்கு பிறகு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் எனவும் சென்னை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img