ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

andal-issue-srirangam-press

ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் விவரம்…

 

  • ஆண்டாள் தாயாரைக் குறித்து தவறாகப் பேசிய வைரமுத்து பிப்ரவரி 2 ஆம்  தேதிக்குள் ஆண்டாளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால், பிப். 3 ஆம் தேதியில் இருந்து ஜீயர் சுவாமி உண்ணாவிரதம்
    மேற்கொள்வார்.

அதே சமயம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஹிந்துக்களும் சந்யாசிகளும் உண்ணாவிரதம் மேற்கொள்வர்..

  • உண்ணாவிரதத்திற்குப் பின்னும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை எனில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூர் வழியாக லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறும்.

  • வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கத்தவர்கள் பேசிய போது பதியப் பட்ட  வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்

*  மத சின்னங்களை, மத அடையாளங்களைப் புண்படுத்தும் வகையில் பேசும் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது

  • ஹிந்துக்களின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி விரைவில் சென்னையில் மடாதிபதிகள் சன்யாசிகளின் மாபெரும் மாநாடு நடைபெறும்..

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பாரதம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுவர்..

5.ஓரிரு நாட்களில் தீர்மான நகல் தமிழக முதல்வரிடம் அளிக்கப்படும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.