ஆண்டவரே திமுக.,விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்: ஹெச்.ராஜா கிண்டல்!

சற்றுமுன் சென்னை

ஆண்டவரே, திமுக.,விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள் என்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்தை நாட்டுப் பண் என்று கூறாமல், நாட்டுப் புறப் பாடல் என்று உச்சரித்தார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளில் கரூரில் பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், விழாவின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அரைகுறையாகப் பாடினார்.

இந்த இரு நிகழ்வுகளும் பலத்த எதிர்ப்பையும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ள நிலையில், இது குறித்து கிண்டல் செய்துள்ள ஹெச்.ராஜா, திமுக., விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுமாறு டிவிட் செய்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்… தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணைப்படி அது நிகழ்ச்சியின் துவக்கத்தில் தான் பாட வேண்டும். ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் தப்பும் தவறுமாக பாடுகிறார். திமுக செயல் தலைவர் தேசிய கீதத்தை நாட்டுப் புற பாடலென்கிறார்.ஆண்டவரே திமுக விடமிருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்… என்று கூறியுள்ளார்.

அந்த டிவிட்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.