ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

Hacker - 2026

இணைய உலகில் புதிய மால்வேர் வலம் வருகிறது. இது உங்கள் சமூக வலைதளங்களை குறித்து வைத்து தாக்குகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்போதுமே மால்வேர் என்றால், அது தர்ட் பார்டி சாஃப்ட்வேர் அல்லது ஆப் மூலமாக நடைபெறும் என்பதே பரவலான கருத்து. ஆனால், இந்த மால்வேர் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற யூசர்கள் பயன்படுத்தி வரும் மைக்ரோசாஃப் ஆப் உள்ளேயே ஊடுருவி வருகிறது.

இந்த மால்வேர் உங்கள் டிவைசுக்குள் எப்படி நுழைகிறது, எப்படி தாக்குதலை தொடுக்கிறது என்பது குறித்து தற்போதைய ஆய்வு முடிவுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

அதேசமயம், டெம்பிள் ரன் மற்றும் சப்வே சர்ஃபர் போன்ற ஆப்களிலும் இந்த மால்வேர் ஊடுருவி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஆப்களுமே மிக பரவலாக பயன்படுத்தும் கேம் ஆப்கள் ஆகும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இதை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும் அல்லது குறைந்தபட்சம் அதுகுறித்து கேள்வி பட்டிருப்பீர்கள்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உங்கள் டிவைஸ் மால்வேர் மூலமாக பாதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை அது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற எச்சரிக்கை தான், நாம் அதுகுறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை குறித்து உணர்த்துகிறது.

தற்போது கவலைக்குரிய விஷயம் என்ன என்றால், உலகெங்கிலும் உள்ள 5,000 டிவைஸ்களை இது ஏற்கனவே தாக்கிவிட்டது என்பதுதான். சிஸ்டம் மட்டுமல்லாது ஃபேஸ்புக், கூகுள் ஆகிய அக்கவுண்ட் மீதுதான் இது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.

இந்த மால்வேர் தாக்கினால், உங்கள் அக்கவுண்ட் உள்ளே தானாக அது லாகின் ஆகி, பிறரது பதிவுகளுக்கு லைக் அல்லது வேறு ரியாக்‌ஷன் கொடுக்க தொடங்குகிறது. குறிப்பாக, ஜிமெயில் மீது தாக்குதல் நடத்தி, அதில் உள்ள காண்டாக்ட்களை இது அழித்து விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மைக்ரோசாஃப் நிறுவனம் தடுக்குமா

மால்வேர் குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம், அதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப் ஆப் ஸ்டோரில் இது ‘ஆல்பம் பை கூகுள் ஃபோட்டோஸ்’ என்ற பெயரில் ஒளிந்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இதையடுத்து, இந்த மால்வேரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய சூழலில், அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யூசர்கள் தங்களை அறியாமலேயே மால்வேர் கொண்ட சோர்ஸ் மீது நம்பிக்கை கொண்டு பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களது சிஸ்டம்களை இது பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, யூசர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories