download 1 1 - 2026

ஜெயக்குமாருக்கு மூன்றாவது வழக்கிலும் முன்ஜாமின்..

சற்றுமுன்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமின் இன்று கிடைத்துள்ளது
.
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்று தள்ளி வைத்தார்.

இதையடுத்து இன்று ஜெயக்குமார் ஜாமின் மனு  மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.

திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள நிலையில் இன்று 3-வது வழக்கில் ஜாமின் பெற்றுள்ளார்.

download 1 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.