மேடையில் ஆடி கொண்டிருந்த போது உயிரிழந்த நடன கலைஞர்!

Published:

dance - 2026

தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தற்போது கிராம திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பாரம்பரிய திருவிழாக்கள் நடைபெற்று, பக்தர்கள் நேற்றிக்கடனும் செலுத்தி வருகின்றனர்

இந்நிலையில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ‘எல்லாம் வல்ல தாயே’ என்ற பாடலுக்குதான் தனது மாணவர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த பரத நாட்டிய கலைஞர் தீடீரென நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார்.

பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய மாணவ, மாணவிகள் மற்றும் அவரது மகள், காளிதாஸ் அமர்ந்த சேர் நோக்கி வந்தபோது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

மேடையிலேயே நடன கலைஞர் காளிதாஸ் உயிர் பிரிந்தது தெரியவந்தது. இதை பார்த்த அவரது மகள், நடன கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியை காண வந்த அனைவரும் கண்ணீர் பெருக்குடன் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வைத்தனர்.

இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸ்க்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டிய மீது அதிக ஆர்வம் கொண்டதால் அவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் ஆடி வருகிறார்.

இவருக்கு பானு என்ற மனைவியும் பிரியதர்ஷினி என்ற மகளும், விஷ்வ ஹர்ஷன் என்ற மகனும் உள்ளனர். மகன் மிருதங்கம் வாசிப்பிலும், மகள் பரதமும் கற்றுக் கொண்டவர்கள்.

காளிதாஸ் ‘பிரிய கலாலயா என்ற’ – என்ற பரத நாட்டியாலய பள்ளியும் வைத்து நடத்தி வருகிறார். இவர் ஆடல் வல்லான் என்ற விருது, கெளரவ டாக்டர் பட்டம், 1000க்கும் மேற்பட்ட சீல்டு, பதக்கம் என வாங்கிய காளிதாஸ் வரும் வருடத்தில் கலைமாமணி விருது கிடைக்கும் என தனது நண்பர்களிடம் தெரிவித்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய போது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related articles

Recent articles

spot_img