images 13 1 - 2026

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

சற்றுமுன்

வன்னியர் சமூகத்தினருக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.எல்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, உள் ஒதுக்கீடு செல்லாது என்ற என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது. 1994ம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இட ஒதுக்கீடு கூடாது. உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான நியாயமான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பு வழங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.

images 13 1 - 2026
ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.