திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் மே 15ல்..

Published:

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் போவார்கள்.

வருகிற 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.45முதல் மே16 காலை 9.43மணிவரை கிரிவலம் நடைபெற உள்ளது.திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

கிரிவலம் சென்று திரும்ப திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செஞ்சி, ஆரணி, புதுச்சேரி பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்தும் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. வழக்கமாக செல்லக்கூடிய பஸ்களை தவிர்த்து கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

images 40 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img