தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!

anegan தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனத்தை அதன் இயக்குநர் கேவி ஆனந்த் நீக்கியுள்ளார். புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான கி.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ என்ற படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், வண்ணார் சமூகத்தை சேர்ந்த பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய வசனத்துடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த வசனத்தை நீக்கிய பின்னரே, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை ஆனேகன் படத்தில் இருந்து, அந்த படத்தின் இயக்குநரே முன்வந்து நீக்கிவிட்டார்’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘அனேகன் படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகுகிறது. மனுதாரர் அந்த படத்தை பார்த்து விட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம். வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். இதனிடையே ‘அனேகன்’ இன்று 750-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. மேலும், அனேகனுக்கு முழு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு. அனேகன் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரைக்கும் குழு முன்பு படத்தை திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள். அக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, படத்து முழு வரிவிலக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அனேகன் குழுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. காரணம் சமீபத்தில் வந்த பெரிய படங்களான ஐ, என்னை அறிந்தால் போன்றவை யு ஏ சான்று பெற்றதால், வரி விலக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories