திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..

Published:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளதால் அன்று சுவாமி தரிசனம் ஐந்து மணிநேரம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாளை மறுதினம் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், 12-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்திற்கு எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!
images 29 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img