பாட வாரியாக, கடினமானப்பகுதிகளை, ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கச்செய்யும் வகையில், வீடியோ தயாரித்து, தீக் ஷா மற்றும் நிஷ்தா செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கீழ், மாவட்டம் வாரியாக, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, இந்நிறுவனங்கள் வாயிலாக, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு வகுப்பு பாடங்களிலும், கடினமானப் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை எளிதாக கற்பிக்கும் வகையில், வீடியோ தயாரிக்கப்படுகிறது.
பாட வாரியான இந்த வீடியோக்கள், ‘தீக் ஷா’ மற்றும் ‘நிஷ்தா’ ஆகிய செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான ‘லிங்க்’ பயன்படுத்தி, எந்த நேரத்திலும், ‘யுடியூப்’ வாயிலாக, ஆசிரியர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தார் கூறுகையில், ‘கதைகள், ஆர்வமூட்டும் செயல்பாடுகள் மற்றும் ‘ஸ்கிரிப்ட்’களை உள்ளடக்கி, வீடியோக்கள் தயாரிக்கப்படுகிறது,’ என்றனர்.