ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களது குடும்பத்தில், படிவம் மூலமாக திரட்டும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா, எத்தனை டோஸ் எடுத்துக்கொண்டுள்ளனர், பள்ளி திறப்பன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்களா, போன்ற விவரங்களை, படிவம் மூலமாக திரட்டும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
அப்படிவத்தில், ‘நவ., 1 அன்று பள்ளி மீண்டும் திறக்கப்படும்போது என் மகன்/ மகள் பள்ளிக்கு அனுப்ப நான் முழு விருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். என்மகன்/ மகள் நலமாக இருக்கிறார்.
நான் கோவிட் – 19 தொற்றுநோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கிறேன். மேலும் எனது மகனை/ மகளை பள்ளிக்கு அனுப்பும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளியும் எனக்கு முழுமையாக தெரியும். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளோம்/ இல்லை.
மேலும் தொற்றுநோய் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் நான் முழுமையாக பின்பற்றுவேன்’ என, இடம்பெற்றுள்ளது.
இதனை பெற்றோர்கள் நன்றாக படித்து பார்க்க சொல்லி, படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக் கொள்ளப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.