இரண்டரை மணிநேரத்தில் நடந்து முடிந்த ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் தேரோட்டம்..

Published:

IMG 20220801 WA0094 1 - 2026
IMG 20220801 WA0083 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் துவங்கிய இரண்டரை மணிநேரத்தில் கோலாகலமாக நடைபெற்று நிலைவந்தடைந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நூற்றிஎட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும், பன்னிரெண்டு ஆழ்வார்களில். இரண்டு ஆழ்வார்கள் – பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிறந்த புண்ணியபூமி ஸ்ரீவில்லிபுத்தூராகும். இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது.
இங்குள்ள ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த திரு நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தினமும் காலை ஆண்டாள் ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளல் இரவு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் , இதற்காக அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப்பொருட்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காலை 9.05 மணிக்கு தேரோட்டத்தை முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து ஆரம்பித்து வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோாவிந்தா… கோபாலா ‘ என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். தேர் ஆடி அசைந்து மக்கள் கடலில் நீந்திவந்த காட்சி பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது.முன்பு பல மாதங்களாக நடைபெறும் இத்தேரோட்டம் இன்று பக்தர்களின் ஆர்வமிகுதியால் இரண்டரை மணிநேரத்தில் நான்கு ரதவீதிகளில் பவனி வந்து காலை11.30க்கு நிலைவந்தடைந்தது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..ஆடிவரும் தேரோட்டத்தைக்கான ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், அன்ன தானம், பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

IMG 20220801 WA0080 - 2026
IMG 20220801 WA0081 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img