அருப்புக்கோட்டை- மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர் கைது

Published:

                 
அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர்கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இரு தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்க்கு  போதை மாத்திரைகள் விற்பதற்காக முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.104 போதை மாத்திரைகள் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டன 

          அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கலிங்கபுரம் பேருந்து நிறுத்தமருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் மேலும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அருகருகே அமைந்துள்ளன.இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 6000ற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர்.இதனிடையே  செவ்வாய்க்கிழமை  அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் இப்பள்ளிகள்  உள்ள பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தாராம்.அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞர் ஒருவர் மதியம் உணவு இடைவேளைக்காக வெளியில் வரும் பள்ளி மாணவ,மாணவியரிடம் பேச முயல்வதும் பின்னர் விலகிவருவதுமாக இருந்தார்.இதனால் அந்த இளைஞரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அவரை ஆய்வு செய்தபோதுதான் சுமார் 104  போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தீபக்ராஜ்  என்பதும்,அங்கிருந்த பள்ளி மாணவ,மாணவியர்க்கு  அப்போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.எனவே இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர்காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு அந்த இளைஞரைக்கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
images 45 - 2026
ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img