கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவத்தில் ஒருவர் பலி..

Published:

Tamil News large 3092127 - 2026

மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அவரது தாய் இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா , இவர் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வந்தார். பிரசன்னாவுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

ஊரப்பாக்கத்தில் உள்ள தனது நிலப்பிரச்சனையில் இருந்து விடுபட எண்ணி அருள்வாக்கு கேட்க சென்றுள்ளார். இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராக உள்ள பிரச்சன்னா, நிலப்பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி கருப்பையாவிடம் பல்வேறு பூஜைகள் செய்வதாக கூறி 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பெற்றதாக கூறப்படுகின்றது.

அதே போல மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலிக்கொடியை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கருப்பையா அளித்த புகாரின் பேரில் கோவை போலீசார் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, உறவினர்கள் ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தன்மீது போலீசார் பொய்யாக வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் இரு பெண் குழந்தைகளுடன் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி தனது இரு பேத்திகளை வைத்து வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் தனது மகன் அப்பாவி என்று கூறி உள்ளார். வீட்டில் உயிருக்கு போராடிய பிரச்சன்னாவின் குடும்பத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி இரண்டாவது குழந்தை ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மூத்தமகள் விஷம் அருந்தவில்லை என்ரு கூறப்படுகின்றது.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கோவை செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

806017 kovai pirasanna - 2026

விஷம் குடித்த பிரசன்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:சென்னையை சேர்ந்த ஒருவர் வழக்கு கொடுத்திருக்கிறார். இந்த வழக்கால் மனம் உடைந்திருக்கிறோம். பொய்யான தகவல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் எல்லாருக்கும் பிரச்னை உண்டாக்குகின்றனர். அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்கள் முடிவை நாங்கள் தேடிக் கொள்கிறோம். சங்கரன், கருப்புசாமி, அவர் மனைவி ஆகியோர் தான் இதற்கெல்லாம் காரணம். எங்கள் நிலை எந்த ஒரு ஜோதிடர், ஆன்மிகவாதிகளுக்கும் வரக்கூடாது. உண்மையான ஆன்மிகத்தை, ஜோதிடத்தை பற்றி தவறாக பேசுவதால் மன வேதனை அடைந்துள்ளோம். இது எங்கள் இறுதி முடிவு.இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகுமாரி வாக்குமூலத்தில், ‘எங்கள் மீது புகார் தெரிவித்தவர்கள், ஆயுசுக்கும் வெளியே வரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். பிரசன்னாவின் மனைவி அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘என் கணவருக்கும், அவர் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, ஒரு வாரமாக சித்ரவதை செய்தனர். வெளியே சொல்ல முடியாத வேதனையால், இனியும் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img