சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் நகைகள் ஆய்வு..

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி சித்சபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி சித்சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கு பொது தீட்சிதர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கோவிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலைதுறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இந்த ஆய்வு நீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஆவணங்களை கொடுக்க மறுத்துவிட்டனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

எனவே அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் நேரடியாகவும், இனையதளம் மூலமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி கடலூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள், சொத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது. அதன்படி இந்த குழுவில் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் ஜோதி , குமரேசன் , சிவலிங்கம் நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் தர்மராஜன் , குமார் , குருமூர்த்தி ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வு செய்யும் விபரம் குறித்து ஏற்கனவே கோவிலில் உளள தீட்சிதர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்படி 6 பேர் கொண்ட குழுவினர் இன்று (22-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இந்த குழுவினர் இன்று காலை 10.30 மணி அளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பொது தீட்சிதர்கள் அலுவலக அறையில் அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21 படிக்கு அருகே உள்ள இடத்தில் தீட்சிதர்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
500x300 1749794 chidambaram - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Topics

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Entertainment News

Popular Categories