சேலம் அருகே ஆம்னி கார்மீது ஆம்னி பேருந்து மோதி 6 பேர் பலி.‌.

Published:

500x300 1750245 salem - 2026
Tamil News large 310602220220823024152 - 2026

சேலம் அருகே ஆம்னி கார்மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் சிறுமி உடபட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி ஆம்னி காரில் 11 பேர் பயணம் செய்தனர்.அப்போது சேலத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் 11வயது சிறுமி உடபட 6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.மீதம் 5 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தகவலறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் 6பேரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.இந்த விபத்தில் சந்தியா(20), சரண்யா(26), ராஜேஷ்,( 29), ரம்யா, (25), சுகன்யா, (28), ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் தன்சிகா, 11, பெரியண்ணன், 38, புவனேஸ்வரி, 17, கிருஷ்ணவேணி, 45, உதயகுமார், 17, சுதா, 36, ஆகிய ஆறு பேர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..இதில் சிறுமி தன்சிகா ( 11) சிகசி்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இதே இடத்தில் கடந்த 10 வருடத்தில் அதிக உயிரிழப்பு நேர்ந்துள்ளது காரணம் நான்கு வழிப்பாதையில் இருந்து மேம்பாலம் இருவழிப்பாதையாக இருப்பதால் விபத்து அதிகம் நடக்கிறது.தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்,சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ய வருகின்றனர்.விபத்து குறித்து ஆர்.டி.ஓ. சரண்யா மற்றும் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

gallerye 024209397 3106022 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img