உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு நேரலையில் வழக்கு விசாரணை..

Published:

841933 untitled 4 - 2026

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்திய நீதித்துறையில் உச்சபட்ச நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா செயல்பட்டு வருகிறார். அவர் உச்சநீதிமன்றத்தில் 48-வது தலைமை நீதிபதியாவார். 2021 ஏப்ரல் மாதம் 21-ம் தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்துள்ளார். இதனிடையே, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் இன்று விசாரிக்கும் வழக்குகள் இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. இதை https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் காலை 10.30 மணி முதல் காணலாம். உச்சநீதிமன்ற வரலாற்றில் வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் அடுத்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யுயு லலித் உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற த்தில் இன்று அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வழக்கு, பெகாசஸ் உள்பட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் தலைமையில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் இணைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ள நிகழ்வு முக்கிய நிகழ்வாக உள்ளது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img