மதுரை அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி; 13 பேர் காயம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

WhatsApp Image 2022 11 10 at 4.04 .47 PM .jpeg - 2026
1789894 explosion - 2026

மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அடுத்த அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் முழுவதும் தரைமட்டமானது. இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி பலியாகினர். இவர்கள் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா என தெரிய வந்ததுள்ளது. 

மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

WhatsApp Image 2022 11 10 at 4.04 .45 PM .jpeg - 2026
971337 madurai - 2026


விபத்து குறித்து வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்-:

மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், ‘மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

 முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி-:

மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி அறிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img