chennai rains 3 - 2026

கனமழை: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சற்றுமுன் Featured சென்னை தமிழகம்
chennai rains 3 - 2026

தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த தட்டச்சு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.