பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..

Published:

1012308 chennai 16 5 - 2026

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. கூடுதல் சிறப்பு ரயில் எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் , திருநெல்வேலி -மைசூரு -திருநெல்வேலி இடைய , திருநெல்வேலி -மைசூரு இடையேஇயக்க தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் மற்றும் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்கின்றனர். இதனால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி தாம்பரம்-நெல்லை (06021), நெல்லை – சென்னை எழும்பூர் (06022), தாம்பரம்-நாகர்கோவில் (06041), நாகர்கோவில் -தாம்பரம் (06042), திருநெல்வேலி (06057/06058) என மொத்தம் தென் மாவட்டங்களுக்கு மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.மறுமார்க்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

மேலும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண  ரயில் (06041) ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அதன்பிறகு நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மகரஜோதி விழாவுக்காக எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் , திருநெல்வேலி -மைசூரு -திருநெல்வேலி இடைய , திருநெல்வேலி -மைசூரு இடையே தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழி சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img