
கனிமொழி கூட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ‘உடன்பிறப்பால் கதறி அழுதார் பெண் காவலர் போலீசில் புகார் செய்தார்.மன்னிப்பு கேட்டு’ பெண் காவலர் புகார் மனுவை வாபஸ் பெற வைத்த திமுக நிர்வாகிகளால் பெண் காவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முன்னாள் திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டதில் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றோருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டி சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகள் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததைர பெரிதுபடுத்த வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர் கதறி அழுதும் எந்த நடவடிக்கையும் செய்ய முடியாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைஅடைந்தனர்.
‘மன்னிப்பு கேட்டு’ பெண் காவலர் புகார் மனுவை வாபஸ் பெற வைத்த திமுக நிர்வாகிகள்!
இந்த நிலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பெண் காவலர் புகார் கொடுத்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது திமுக நிர்வாகிகள் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் பெண் காவலர் புகார் மனுவை வாபஸ் பெற வைத்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





