தந்தை, தாய், காதலியை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்த இளைஞர்..

Published:

1122465 cpkgf 1 - 2026

சத்தீஷ்கார் மாநிலத்தில் தாய், தந்தை,காதலியை அடுத்தடுத்து கொலை செய்து நபர் ஒருவர் வீட்டு தோட்டத்தில் புதைத்த சம்பவம் தெரிய வந்து உள்ளது.

மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் வசித்து வந்தவர் ஆகான்கிஷா என்ற சுவேதா. சமூக ஊடகம் வழியே 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதன்பின்பு, அது காதலாக மாறியுள்ளது.

9 ஆண்டுகளுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா, போபால் நகரில் சாகேத் நகரில் வேலைக்காக சென்றவர், அப்படியே உதியனுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.

ஆனால், அவரது வீட்டில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறேன் என சுவேதா கூறியுள்ளார். இந்நிலையில், 2016-ம் ஆண்டு ஜூலைக்கு பின்னர், சுவேதாவுடன் அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவேதாவின் சகோதரர், தொலைபேசி எண்ணை வைத்து தேடியதில் போபால் நகரை அடையாளம் காட்டியுள்ளது.

உதியனுடனான தொடர்பை சந்தேகித்த சுவேதாவின் குடும்பத்தினர் 2016-ம் ஆண்டு டிசம்பரில் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சுவேதாவை உதியன் கொலை செய்து பெட்டியில் போட்டு, வீட்டின் படுக்கை அறையில் புதைத்து வைத்து உள்ளதும், அதன்மேல் சிமெண்ட் பூசி அடையாளம் தெரியாதபடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதன்பின், 2017-ம் ஆண்டு ஏப்ரலில் 600 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் உதியனுக்கு எதிராக பாங்குரா போலீசார் தாக்கல் செய்தனர். 19 சாட்சிகளின் விசாரணை, அனைத்து சான்றுகளின் அடிப்படையில், 2020-ம் ஆண்டு உதியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், சந்தேகம் தீராமல் உதியனை போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில், அவர் 2010-ம் ஆண்டு தாயார் இந்திராணி மற்றும் தந்தை வி.கே. தாஸ் ஆகியோரை படுகொலை செய்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இருவரின் உடலையும் சத்தீஷ்காரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் டி.டி. நகரில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் உதியன புதைத்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. ஆனால், இந்த கொலைக்கான காரணங்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img