images 93 - 2026

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்..

சற்றுமுன்
images 93 - 2026

குஜராத், லடாக்கை தொடர்ந்து இந்தியாவில் இன்று அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.20 மணியளவில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்தியாவிலும் சில நகரங்களிலும் சமீபகாலமாக நிலநடுக்கங்கள் அவ்வப்போது உணரப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று அசாம் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 4.18 மணிக்கு அசாம் மாநிலம் நாகோனில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதது.இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தை மத்திய அரசின் நிலஅதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

அதாவது அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அந்த மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று மாலை 4.18 மணிக்கு அசாமின் நாகான் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என கூறப்பட்டுள்ளது

இருப்பினும் அசாமில் எந்த சேதமும், உயிர் பலியும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக நேற்று லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் நேற்று மதியம் 3.17 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது. ஏற்கனவே குஜராத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நிலையில் இன்று அசாமின் நாகோனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.