arjun sampath arrested near madurai - 2026

சிலைக்கு மாலை போடப் போன அர்ஜுன் சம்பத்… மதுரையில் கைது!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
arjun sampath arrested near madurai - 2026
#image_title

மதுரை தல்லாகுளம் பகதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் , அம்பேத்கரின் 67-வது நினைவுநாளையொட்டி, அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே 17 இயக்கம் புரட்சி பாரதம் கட்சியினர் என்பன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ,இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் அர்ஜுன் சம்பத் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித்
தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.