forestfire2 - 2026நேற்று முதல் தேனி பகுதியில் உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீவிபத்தில் இதுவரை 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் மீட்புப்பணியும் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது, இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வனத்துறை ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வொரு ஜனவரி மாதமும் பைஃயர் வாட்சர்” என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் காடுகளில் தீ பரவாமல் கண்காணிப்பது போன்ற பணிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தமிழகத்தின் பல்வேறு காட்டுப்பகுதிகளில் தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் தமிழக வனத்துறையில் 50 சதவித பணியிடங்கள் காலியாக உள்ளது. 3000 ஆயிரம் ஹெக்டர் காட்டுக்கு ஒரு வன கண்காணி்ப்பாளர் இருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களால் ஒரு வன கண்கணிப்பாளர் 6000 ஆயிரம் ஹெக்டர் காட்டை பாதுகாக்க வேண்டியுள்ளது. மதுரை வனக் கோட்டத்துக்கு, மண்டல வன அலுவலர் பதவி கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது” என்று வேதனையுடன் கூறினார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending