
முன் பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை வெளியீடு செய்வதில்(passenger shorts preparation)இந்திய ரயில்வே பயணிகள் நலன் கருதி தற்போது மாற்றம் செய்துள்ளது.
முன்பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை இதற்கு முன்னர் இரயில் தொடங்கும் இடத்தில் புறப்படும் நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு அட்டவணையை தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த முன்பதிவு அட்டவணை விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது
அதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு 9 மணியளவில் முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்
மதியம் 2 மணி முதல் காலை 5 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்
முதல் முன்பதிவு அட்டவணையில் தான் ஒரு பயணியின் இருக்கை எங்கே என்பது உறுதி செய்யப்படும்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் Current Availability எனப்படும் முதல் முன்பதிவு அட்டவணை தயாரித்த பிறகு மீதமுள்ள இருக்கைகள் இரயில் புறப்படுவதற்கு முன்பு வரை மீதமுள்ள இருக்கைகள் தற்சமயம் முன்பதிவு இனிமேல் முதல் நாள் இரவு 9 மணி அல்லது இரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தற்சமயம் முன்பதிவு தொடங்கப்படும்
இது இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு இடங்களில் தயாரிக்கப்படும் இடத்திற்கும் பொருந்தும், இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு தயாரிக்கப்படும் இடம் நெருங்கும் வரை இந்த தற்சமயம் முன்பதிவு Current Availability முன்பதிவு இருக்கும்
காத்திருப்போர் பட்டியல் 25% சதவீதத்தை தாண்டினால் முன்பதிவை நிறுத்தப்படும் என்று இரயில்வே துறை தெரிவித்துள்ளது இதனால் Current Availability முன்பதிவில் அதிக இருக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.





