December 13, 2025, 1:26 PM
28 C
Chennai

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

sabarimala rope car service - 2025

சபரிமலையில் ரோப் கார் சேவை விரைவில் துவங்க உள்ளது சபரிமலையில் ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரோப் கார் சேவை அமைப்பதற்காக பம்பை ஹில் டாப்பில் இருந்து சன்னிதானம் வரை சுமார் 2.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 271 கோடி மதிப்பீட்டில் கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் அதிக அளவிலான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வருவது வழக்கமாகும். அப்படி தரிசனத்துக்கு வரும் பக்தர்களில் சிலர் மலை ஏறுவதற்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். அவர்களை டோலி மூலம் மலைக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். இதே போல, பம்பையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை மீது உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பூஜை பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. முந்தைய காலங்களில் கழுதைகள் மூலம் இந்த பொருட்கள் அனைத்தும் சபரிமலை சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போது, டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
சபரிமலையில் ரோப் கார் சேவை தொடங்க திட்டம்

இந்த நிலையில், சபரிமலையில் ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரோப் கார் சேவை அமைப்பதற்காக பம்பை ஹில் டாப்பில் இருந்து சன்னிதானம் வரை சுமார் 2.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 271 கோடி மதிப்பீட்டில் கேபிள்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக காட்டுப்பகுதியில் 5 தூண்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், இதற்கு இடையூறாக உள்ள சுமார் 80 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன. இதற்கு, வனவிலங்கு சரணாலய வாரிய கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள மகரஜோதியின் போது, ரோப் காருக்கான கேபிள்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த ரோப் கார் சேவையின் மூலம் கோவிலுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், கோவிலுக்கு வரும் நோய் வாய்ப்பட்ட பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஆகியோர் இதை உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆர். டி. ஓ. அருண் எஸ். நாயர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர், சிறுமிகள், முதியோர்கள் உள்ளிட்டோர் பெருவழிப்பாதை, புல் மேடு பாதைகளில் பயணிப்பதை தவிர்த்து, நிலக்கல் மற்றும் பம்பை வழியாக வர வேண்டும். ஏனென்றால் பெருவழிப்பாதை மற்றும் புல் மேடு பாதையில் மருத்துவ வசதி மீட்பு பணி உள்ளிட்டவை மேற்கொள்வதற்கு இடையூறு உள்ளன என்று தெரிவித்தார்.

ரோப்கார்’ எனப்படும் கம்பியில் இயங்கும் போக்குவரத்து சேவையை சபரிமலையில் செயல்படுத்த, மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என, ‘ட்ரோன்’ மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.பம்பையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இது, பக்தர்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால், ‘ரோப்கார்’ போக்குவரத்து சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பலகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., துாரத்திற்கு 271 கோடி ரூபாய் செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து துாண்கள் நிறுவப்படும். கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது.

அதன்படி மொத்தம், 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இன்று, வனவிலங்கு சரணாலய வாரியத்தின் கூட்டம் நடக்கிறது. இதில் முடிவு எடுக்கப்படும். அடுத்த மாதம் நடக்கவுள்ள மகரஜோதியின் போது, ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தலாம்.

‘பெருவழி பாதையை தவிர்க்கவும்’ சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் – சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும். நிலக்கல் – பம்பை வழியாக வர வேண்டும். பெருவழிப் பாதை, புல்மேடு பாதையில் மீட்பு, மருத்துவ வசதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories