ஏன் என்னை பின் தொடர்ந்து வருகின்றீர்கள்? செய்தியாளர்களை கடிந்து கொண்ட ரஜினி

சற்றுமுன் தமிழகம்

rajinikanth - 2026தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் தற்போது திராவிட நாடு என்ற குரல் ஓங்கி வருகிறது. இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் இமயமலையில் உள்ள ரஜினியிடம் திராவிட நாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி, ‘ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள்’ என்று கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது. திராவிட என்ற கோரிக்கையை திமுகவே சமீபத்தில் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இமயமலையில் ஆன்மீக யாத்திரையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அதன் ஒரு கட்டமாக நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா புனித தலத்திற்கு சென்றார். அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், ஆசிரமங்களுக்குச் சென்று சாமியார்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

பின்னர் இந்த புனிதமான கோவில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஆன்மீக யாத்திரை மேற்கொள்ள துவாரகா மிகச் சிறந்த இடம் என்றும், இங்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள், கடந்த முறை தாம் வந்தபோது இருந்ததைவிட, மிகவும் மேம்பட்டு இருப்பதாக ரஜினிகாந்த் கூறினார். மேலும் முற்காலத்தில் சித்தர்கள் தவம் செய்த இடம் இது என்றும், ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.