பிரபல நாடகக் கலைஞர் சீனுமோகன் மாரடைப்பால் மரணம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
cheenumohan - 2026

சென்னை: பிரபல நாடக மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் சீனு மோகன் இன்று தனது 62 வயதில் காலமானார்.

வியாழன் இன்று (டிச.27) அதிகாலை திடீரென அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கே சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானதாக மருத்துவர்கள் கூறினர்.

கிரேஸி மோகன் நாடகக் குழுவில் பட்டையைக் கிளப்பியவர் சீனு மோகன்! நகைச்சுவை பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து சீனு என்ற கதாபாத்திரம் உயிர்பெறக் காரணமாக இருந்தவர். அவருடன் நகைச்சுவை தொடர்களில் நடித்துள்ளார். கிரேஸி கிரியேஷன்ஸில் 1979 முதல் இணைந்து மேடைகளில் வலம் வந்தவர்.

கார்த்தி நடித்த வருஷம் 16, ரஜினியின் தளபதி படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். அஞ்சலி, விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் சினிமா அவருக்கு பிடிக்கவில்லை. தனது ஆர்வமான மேடை நாடகத் துறையையே பெரிதும் காதலித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் இறைவி படத்தில் மீண்டும் நடித்தார். ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், வடசென்னை, கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு பாத்திரங்களில் நடித்தார்.

சீனுமோகனின் திடீர் மரணம், திரையுலகினரை, மேடை நாடகக் கலைஞர்கள், ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீனு மோகனின் இறுதிச் சடங்குகள் டிச.29 சனிக்கிழமை, சென்னை அண்ணா நகரில் நடைபெறும் என்று குடும்பத்தார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.