கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி., ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published:

Pregnant woman gives complaint in sathur - 2026

சென்னை: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி., தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. *சாத்தூரில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி, சாத்தூர் காவல் நிலையத்தில் கணவருடன் வந்து புகார் மனு அளித்தார்

தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் கோரிக்கை வைத்தார்.

சாத்தூர் அரசு மருத்துவமனையின் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி ஊழியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, ஹெச்ஐவி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட கர்ப்பிணி போலீசில் புகார் அளித்தார்.

எச்ஐவி தொற்று பாதிப்புள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஊடகங்களில் பேட்டி அளித்தார்.

எனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இனி எங்கள் குடும்பத்திற்கு அரசுதான் பொறுப்பு என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கோரிக்கை வைத்தார்.
எனக்கு அரசு வேலை தேவையில்லை, மனைவியின் சிகிச்சை தான் முக்கியம் என்று அவர் ஊடகங்களில் பேட்டி அளித்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தபட்ட ரத்த வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதர செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கருவில் உள்ள குழந்தைக்கு 99% எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க வாய்ப்புள்ளது என்றும்,

பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அப்படி அவர்களுக்கு அங்கு திருப்தியில்லை எனில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய தயார் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இதை அடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 ரத்த வங்கிகளில் பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மனோகரன் உத்தரவு பிறப்பித்தார். மேலும்,

ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் 8 மாத சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப் படும் என்றும், கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தகவல் தெரிவித்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இதனிடையே, கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக, உயர்மட்ட தொழில் நுட்பக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் சென்று, கர்ப்பிணி பெண்ணிடம் நடந்தது குறித்து விசாரித்தார்.

இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக, மதுரை ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் மருத்துவர் சிந்தா தலைமையில், உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், மருத்துவர்கள் மற்றும் ரத்த வங்கி ஊழியர்களுடன் விசாரணை நடத்துவதுடன், விருதுநகர் மற்றும் சிவகாசியில் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு நடத்தவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விருதுநகர் சென்ற ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு முதலில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவருக்கு திருப்தியாக இல்லை என்றால், வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், கர்ப்பிணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதனிடையே ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு சென்றார். கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், நியாயப்படுத்த முடியாத தவறு நிகழ்ந்திருப்பதாகக் கூறினார். முறையாக பரிசோதித்த பின்னரே ரத்தம் ஏற்றப்படுவதால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்தம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தற்போதைய ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் எப்படி உள்ளது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா? என்று, இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்டில் விமர்சித்தார்.

Related articles

Recent articles

spot_img