சொந்த சகோதரியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை! சகோதரன் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
Annamalai
Annamalai

சென்னையில் 40 வயதான சகோதரியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சொந்த சகோதரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

சென்னை அருகே 40 வயது உடைய பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் தம்பியான அண்ணாமலை என்பவர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து கூடப்பிறந்த சகோதரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

தினமும் மது அருந்திவிட்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அண்ணாமலையை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.