udayanidhi - 2026

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வந்த ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. கோலிவுட்டின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபின்னர் சரியான ரிலீஸ் தேதி பார்த்து இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ‘கண்ணே கலைமானே’ படத்தை தனது நண்பர்களுடன் முழுவதுமாக பார்த்த இயக்குனர் சீனுராமசாம், உதயநிதியின் நடிப்பை பாராட்டியதோடு, அவருக்கு ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தை அளித்துள்ளார். ஏற்கனவே அவர் தர்மதுரை’ படம் முடிந்தபின்னர் விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு அவரது ரசிகர்களும், திமுகவினர்களும் ஏற்கனவே ‘மூன்றாம் கலைஞர்’ என்ற பட்டத்தை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending