பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்பவர் மதுரை 5 வது நீதிமன்றத்தில் பேராசிரியர் கருப்பசாமி சரண் அடைந்தார்.NIRMALADEV - 2026

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக, அந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானதால் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை சர்ச்சைக்குள்ளானது.

நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. இதுவரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா, புத்தாக்கப் பயற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன், தொலை நிலைக்கல்வி இயக்குநர் விஜயராஜன், பேராசிரியர் முருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆரம்பத்தில் விசாரணையில் ஆஜராகாமல் டிமிக்கிக் கொடுத்து வந்த பேராசிரியர் முருகனை சில நாள்கள் தேடலுக்குப்பின், நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்துக்கு வேலைக்கு வந்தபோது பிடித்து விருதுநகருக்கு அழைத்துச் சென்றது சி.பி.சி.ஐ.டி. அவரிடம் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்பவர் மதுரை 5 வது நீதிமன்றத்தில் பேராசிரியர் கருப்பசாமி சரண் அடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending