இம்ரான் கான் தனது இரண்டாவது மனைவியையும் திருமணமான 10 மாதங்களில் விவாகரத்து செய்கிறார்

Published:

கிரிக்கெட் முன்னாள் வீரரும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள்.

இம்ரானின் அதிகாரபூர்வ முகனூல் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. ஆனால் அவற்றை இம்ரான் மறுத்து வந்தார். முன்னதாக இம்ரான் தனது முதல் மனைவி ஜெமிமாவை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகளாக கணவன், மனைவியாக இருந்தனர்.

ரெஹாம் கானும் தனது ட்விட்டர் கணக்கில் தாங்கள் பிரிந்துபோக முடிவு செய்ததை உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாதத்தில்தான் இந்த இருவரும் இம்ரான் கானின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அனுமானரீதியிலான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அவரது கட்சிக்காகப் பேசவல்ல நயீம் உல் ஹக் கூறினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இது குறித்து இனி மேலதிகத் தகவல்கள் தரப்படாது என்றும் அவர் முகனூல் பக்கங்களில் கூறினார்.

இதை தனது ட்விட்டர் கணக்கில் எதிரொலித்த இம்ரான் கான், ” இது எனக்கும், ரெஹாமுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் வலியைத்தரும் காலகட்டம். எங்களது அந்தரங்க விஷயங்கள் குறித்து மரியாதை காட்டுமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img