நலத்திட்ட உதவி வழங்கும் போது பயனாளிக்கு அடி கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

Published:

 
 
சேலம் மாவட்டத்தில் நேரு கலையரங்கில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் போது, புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்காத அதிமுக கட்சியின் உறுப்பினரும், நலிந்த தொழிலாருமான ஒருவரின் தலையில் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
 
அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
31-10-2015 இன்று காலை நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், பன்னீர்செல்வம், காமராஜ், அமைச்சர்கள் பழனிப்பயன், தங்கமணி, எடப்படி பழனிச்சாமி, வீரமணி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி, மேயர் சவுண்டப்பன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறையில் உள்ள நலிந்த மூத்த தொழிலாளர்கள் 14 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது.
 
நலிந்த தொழிலாளர் ஒருவரை மேடைக்கு வரவழைத்து உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது அவர் புகைப்படம் எடுக்க கேமராவை பார்க்கவில்லையாம். அதனால் அவருக்கு பின்னால் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி அவரை தலையில் அடித்து கேமராவை பார்க்கும்படி கூறியுள்ளார்.
 
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக
பரவி வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக கட்சியின் உறுப்பினரும் நலிந்த நலிந்த தொழிலாருமான ஒருவரை சட்டமன்ற உறுப்பினர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும், ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img