17 வயதான பள்ளி மாணவியை 17 வயது சிறுவன் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதாலா நகரில் உள்ள காந்தி முகாம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி பள்ளிக்கு வெளியே பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை சந்தித்துள்ளார். சிறிது நேரம் பேசிய அவர் மாணவியை அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுவன் வாக்குறுதி அளித்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
சிறுமி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து சிறுவன் அந்த சிறுமியை கற்பழிப்பு செய்துள்ளார். சிறுமி நேற்று முன்தினம் தான் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுவன் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
நடைபெற்ற சம்பவம் குறித்து சிறுவனின் தாய்க்கு தெரியும் என்றும், அறைக்குள் தாங்கள் சென்றபோது அவர் தான் வெளியே பூட்டியதாகவும் 17 வயது பள்ளி சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை நேற்று கைது செய்தனர். ஆனால் அவரின் தாய் தலைமறைவாகிவிட்டார். 17 வயது மைனர் சிறுமியை மைனர் ஒருவர் கற்பழிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



