1. IMG 20180605 WA0016 1 - 2026விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பெருவலூர்  பகுதியை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பில் 1125 மதிப்பெண் பெற்றுள்ளார். இதே போன்று பெருவள்ளூர் அரசு பள்ளியில் படித்த பிரதீபா  பத்தாம்  வகுப்பில் 495 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற பிரதீபா திருவண்ணாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending