வைகோவின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சற்றுமுன்

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவரது  இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.வைகோவின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 96 கடந்த உடல்நலக்குறைவால் சில நாட்களாகஅவதிப்பட்டு வந்த அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

வைகோவின் தாயார் காலமானா தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.

வைகோவின் தந்தை வையாபுரி. அவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு வைகோ, ரவிச்சந்திரன் என்ற 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். தி.மு.க.வில் வைகோ மாணவர் பருவத்தில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும்.

பின்னர் வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியபோதும் மாரியம்மாளிடம் ஆசி பெற்றே கட்சியை தொடங்கினார்.அரசியல் மற்றும் சமூக பணிகளில் வைகோவின் தாயார் மாரியம்மாள் அதிக ஆர்வம் உடையவர்.

தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்குசென்று மாரியம்மாளை சந்தித்து பேசி உள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருமுறையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோதும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

மாரியம்மாள்சமீபத்தில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தின் போதும் க லந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.