அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் இருவர் நீக்கம்

சற்றுமுன்

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்டது

அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.இதனால் ஜாதிக் கலவரம் வெடித்தது பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது. அதனால் முத்தரையர் சங்க நிர்வாகி செல்வகுமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 1,525 பேரை கைது செய்த காவல்துறையினர்.
நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செயல்பட்டு, ஜாதிக் கலவரத்தை உருவாக்கியதாக கூறப்படும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடு களுக்கும் முரணான வகையில் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கறம்பக்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் எம்.சொக்கலிங்கம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.கெங்கையம்மாள் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர் என அறிவித்துள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.