
நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஶ்ரீ ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,,மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது தொண்டைப் பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள்.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுகளைப் பெற தகுதி இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால் பத்ம விருதுகளை ” மக்கள் பத்ம” விருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், இந்த விருதுகளுக்காக சுய நியமனம் உள்பட நியமனங்கள்/ பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி மக்கள் பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில் ” இந்தியாவில் பல திறமையான நபர்கள் உள்ளனர், அவர்கள் அடிமட்டத்தில் விதிவிலக்கான வேலைகளைச் செய்கிறார்கள்.
அவற்றில் பெரும்பாலானவற்றை நாங்கள் பார்க்கவோ கேட்கவோ இல்லை. இதுபோன்ற எழுச்சியூட்டும் நபர்கள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களை மக்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்.
செப்டம்பர் 15 வரை இதற்காக விண்ணப்பிக்கலாம்.. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியையும் மோடி பதிவிட்டுள்ளார்.
India has many talented people, who are doing exceptional work at the grassroots. Often, we don’t see or hear much of them. Do you know such inspiring people? You can nominate them for the #PeoplesPadma. Nominations are open till 15th September. https://t.co/BpZG3xRsrZ
— Narendra Modi (@narendramodi) July 11, 2021