செம.. கலக்கல்.. பவர்.., வலிமை மோஷன் போஸ்டருக்கு பிரபலங்கள் ட்விட்!

Published:

ajith - 2026

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ajith valimai - 2026

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

valimai 2 - 2026

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில நேற்று முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

valimai ajith - 2026

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களின் இரண்டாண்டு காத்திருப்புக்கு விடை கிடைத்துள்ளது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வடிவிலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

இந்த மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வடிவிலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாது முதல் திரை உலக பிரபலங்கள் அவர்களது கருத்துகளை தெரிவித்து ட்வீட் பதிவிட்டு வருகின்றனர். இதோ அவர்களின் ட்வீட் பதிவு.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img