
தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று காலை 10 மணி அளவில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அவரிடம் ஆசி பெற்றார்.
அதன் பின்னர் வெளியில், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தேர்தலில் ஓட்டுப் போடுவது, பணியாற்றுவதும்கூட தேர்தல் பங்களிப்புதான். வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி மதுரையில் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
தி.மு.க.,வில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் அவரைப் பார்ப்பேன் என்றார் மு.க.அழகிரி.