பெண் காவலர் பயணி ஒருவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் பலி

Published:

 மேற்கு வங்காளத்தின் உத்தர்பாரா மற்றும் ஹிந்த் மோட்டார் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த உள்ளூர் பயணிகள் ரெயிலில் இருந்து ரெயில்வே படை

பயணி ஒருவரை ரயில்வே படை பெண் காவலர் வெளியே தள்ளி விட்டதில் அவர் பலியானார்.

இந்த சம்பவத்தை அடுத்து பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஹவுரா-பண்டல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் மறியல் போராட்டமும் நடந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் பத்ரகாளி நகரில் துவாரிக் வன சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் தீபக் சர்மா (40). இவர் நேற்று மாலை உத்தர பிரதேசத்தின் ஹவுரா-பண்டல் செல்லும் மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு புறநகர் உள்ளூர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரை பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஒருவர் அம்டாலா பகுதி அருகே வெளியே தள்ளி விட்டுள்ளார். ரயில் ஹிந்த் மோட்டார் ரயில் நிலையத்திற்கு இரவு 7.55 மணிக்கு வந்தபோது, பயணிகள் பெண் காவலரை அடித்து உள்ளனர்.

தீபக் மரண செய்தி பரவியதை அடுத்து ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதுடன் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். அதனுடன் வேறு 2 ரெயில்களை நோக்கி கற்களை வீசினர். அதன் ஜன்னல்களை அடித்து நொறுக்கி பெட்டிகளை சேதப்படுத்தினர். இந்நிலையில், அதிக எண்ணிக்கையில் போலீசார் கொண்ட படை ஒன்று அங்கு வந்தது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அவர்களை நோக்கியும் கற்கள் வீசப்பட்டன என அரசு ரயில்வே போலீசின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பின் உத்தரபாரா & amp கோத்ராங் நகராட்சியின் தலைவர் திலீப் யாதவ் தலைமையில் ஹிந்த் மோட்டார் ரயில்நிலைய பகுதியில் ரயில் மறியல் போராட்டம் மீண்டும் நடந்தது. பேலூர் ரயில் நிலையத்திலும் ஒரு பகுதி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தினால் ஒட்டு மொத்த ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியரான தீபக் தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவர் தவறு எதுவும் செய்து இருந்து அல்லது பெண்கள் பெட்டியில் பயணம் செய்து உள்ளார் என அறியப்பட்டால் பெண் காவலரே அவரை கைது செய்திருக்கலாம். ஓடும் ரயிலில் இருந்து அவரை ஏன் கீழே தள்ளி விட வேண்டும்? என திலீப் யாதவ் கூறியுள்ளார். அந்த பெண் காவலர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் ரயிலுக்காக காத்திருந்த பால் வியாபாரி ஒருவர் பலியாகியுள்ளார். ரயில் நிலையங்களில் 100க்கும் அதிக பயணிகள் ரயிலுக்காக காத்திருந்து அவதியுற்றனர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img