ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

17 Aug 05 Ration shop workers - 2026சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் ரேஷன் கடை மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஊழியர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், இன்று வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை ரேஷன் கடை மூடி போராட்டத்தல் ஈடுபட போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு சிரமம் இன்றி ரேசன் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி விரைவில் முடிவுகளை அறிவிப்போம் என்றார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories