வரும் செப்.27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி செங்கோட்டை காவல்நிலையத்தில் பாஜக., சார்பில் மனு அளிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் கல்லெறித் தாக்குதல் நடத்தப் பட்டு, விநாயகர் சிலை சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த இந்து இளைஞர்களும் பதிலுக்கு கல்லெறிதலில் ஈடுபட்டனர். இதை அடுத்து கலவரம் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. எனவே ஊருக்குள் புதிய நபர்கள் நுழைவதற்கும், அர்சியல் ரீதியாக இயக்கத்தவர்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், கூட்டம் போடுவதற்கும் தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செங்கோட்டை விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அறிவித்தார். அதை முன்னிட்டு செங்கோட்டை நகர பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.