கனவின் விளைவு: இப்படி கண்டால் புகழோ புகழ்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

நீங்கள் ஒருவரை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும்.

ஒரு நாடோடியை கனவு கண்டால் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகும் என்பதை குறிக்கிறது

நீங்கள் பெற்றோர் அல்லது நண்பர்களை ஓடிபிடிப்பது போல கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.

பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

கால் கை இல்லாதவர்கள் கனவில் வந்தால் உங்களால் எந்த ரகசியமும் காப்பாற்ற முடியாது என்பதை குறிக்கும்

ஊமையை காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.

மற்றவர் பிச்சை எடுப்பது போல கனவு கண்டால், வியக்க வைக்கும் வகையில் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படப் போகிறது. மேலும் உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டு இருக்கும் முக்கிய பிரச்சனை ஒன்றும் விரைவில் தீரப் போகிறது என்று பொருள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பிரசவ வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்

நெருங்கிய நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் கனவு காண்பவர்களுக்கு வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வரும். துன்பங்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.

தோல் விற்கும் வியாபாரியை கனவில் காண்பது பெரியோர்களின் நட்பு கிடைப்பதை குறிக்கிறது.

முடி வெட்டும் கடையில் இருப்பது போல் கனவு வந்தால் நோய்கள் கவலைகள் பண விரயங்கள் அதிகரிக்கும் அந்த பணத்தை சுப காரியங்களுக்கு செலவு செய்தால் நன்மை கிடைக்கும்

நீங்கள் யாருக்காவது புத்திமதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்கள் இடையே மனக்கசப்பு தோன்றும் என்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.