ஆரோக்கிய சமையல்: கீரைத்தண்டு மோர்க்கூட்டு

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Keerai thandu morkuttu
Keerai thandu morkuttu

கீரைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை:
கீரைத்தண்டு (பெரியது) – ஒன்று,
தயிர் – 100 மில்லி,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து, தயிருடன் கலக்கவும். இதை வேகவைத்த கீரைத் தண்டுடன் கலந்து லேசாக கொதிக்கவிட்டு, தேங் காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.