“மா” புராணம்

IMG 20220821 WA0022 - 2026

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்-

(ஆசிரியர், கலைமகள்)

மா புராணம் என்றால் ஏதோ மாமரத்தைப் பற்றி நான் எழுதப் போகிறேன் என்று எண்ணி விடாதீர்கள். அரிசி மா சத்துமா இவைகளைப் பற்றித்தான் கீழே விவரமாகத் தந்துள்ளேன். பூஜைக்கு உரியவை இந்த அரிசிமாவும் சத்துமாவும்!!

இப்படி ஒரு சிந்தனை ஏன் ஏற்பட்டது? என்றால் நேற்று கோகிலா அஷ்டமி. இன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த இரண்டு நாளிலும் என் மனைவி வீடு முழுக்க அரிசி மாவினால் கிருஷ்ணனின் பாதங்களை வரைந்து இருந்தாள்……

அரிசி மாவை வைத்துக்கொண்டு கோலம் இடுவது நம்முடைய சம்பிரதாயங்களில் ஒன்றாகும்! ஏனென்றால் எறும்பு பூச்சிகள் இந்த மா துகள்களைத் தின்று உயிர் வாழும் என்கின்ற அர்த்தத்தில் தான்!.

மா கோலம் இடுவது கூட ஒரு விதத்தில் மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது.

பச்சை அரிசியை நீரில் நனைத்து உலர்த்தி உரலில் இடித்து மாவாக்குவார்கள். இந்த மாவுடன் வெல்லப்பாகைச் சேர்த்து பிசைந்து கூடவே ஏலக்காய் துகள்களையும் சேர்ப்பார்கள். இந்த கூட்டுப் பொருள் மாவிளக்கு மா ஏற்றப் பயன்படுகிறது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

பிசைந்த மாவைக் குவித்து நடுவில் குழியிட்டு அதில் நெய் ஊற்றி ஏற்றுவார்கள். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்திம் அன்று மா விளக்கு மா ஏற்றுவோர் உண்டு! பெண் தெய்வங்களுக்கும் மா விளக்குமா ஏற்றுவதுண்டு. அதேபோல் பெருமாள் முன்பாகவும் மாவிளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். நினைத்தக் காரியம் நடப்பதற்காக சுப காரியங்கள் கை கூடுவதற்காக மாவிளக்கு ஏற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்வதும் உண்டு.

அரிசி மாவைப் போல சத்துமாவும் யாக காரியங்களுக்குப் பயன்படக்கூடியதாகும். சில வேள்விகளின் போது சத்து மாவை நிவேதனம் செய்வதுடன் அக்கினியில் இடுவதும் உண்டு. வேத பிராமணர்கள் யாகம் செய்யும் பொழுது சத்து மாவை கஞ்சியாகக் காய்ச்சிக் குடிப்பார்கள். இந்தக் கஞ்சியில் உப்பு சேர்க்கப்படாததால் இது பத்து ஆகாரம் ஆகாது என்ற விதியும் இருக்கிறது. இது ஒரு சூட்சமமான விஷயம்.

மண்டை மா விளக்கு என்கின்ற பிரார்த்தனை தென் மாவட்டங்களிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் அரிசி மாவில் முன்னர் சொன்னபடி வெல்லப்பாகு ஏலக்காய் இவைகளைச் சேர்த்து நெய் விளக்கு இடுவார்கள். இது ஒரு பலகையின் மீது வைக்கப்பட்டிருக்கும். பலகையை தூக்கியபடி கோவிலை வலம் வருவார்கள். இந்த மாவிளக்குமா பெரும்பாலும் கோவில்களில் தான் ஏற்றப்படும். தலையில் தூக்கிக் கொண்டு செல்வதால் மண்டை மா விளக்கு என்று இதைச் சொல்கிறார்கள்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
IMG 20220821 WA0023 - 2026

தினைமாவு முருகனுக்கு மிகவும் பிரியமான உணவாகும். காட்டில் வாழும் வேடுவர்கள் தினையை மாவு போன்று செய்து உணவில் பயன்படுத்துவார்கள். எனவே இதுவே வள்ளிக்கு உணவானது. அதனால் முருகனுக்கும் தினை மாவு நிவேத்தியம் செய்யப்படுகிறது. முருக வழிபாட்டின் போது தினை மாவு பிரசாதம் பிரதானமாக இருக்கும். திருச்செந்தூரிலும் கதிர் காமத்திலும் தினை மாவில் மா விளக்கு ஏற்றுவோரும் உண்டு.

தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்து அளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே… என்பது குமரகுருபரின் வாக்காகும்.

கேழ் வரகு மாவும் இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவார்கள். கேழ்வரகு மாவைப் புளிக்க வைத்து அதில் அரிசி நொய் (குருணை என்று தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்) சேர்த்து கூழாக்கி தெய்வங்களுக்குப் படைக்கின்றனர்.

கூழ் ஊத்துவது என்பது சென்னை போன்ற நகரங்களில் பெரிய விழாவாக எடுக்கப்படுகிறது.” கஞ்சியோ கூழோ நாம் உழைத்து சாப்பிட்டால்தான் திருப்தி” என்கிற பழமொழியும் உண்டு.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

சில குடும்பங்களில் இறப்புக்குப் பின் …….. அக்னிக்கு உடம்பைக் கொடுத்த பின் அரிசி மாவில் மனித உருவம் செய்து மந்திரங்களுடன் ப்ரீதி செய்வது உண்டு. மா என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories