பான் கார்டுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published:

athar pan - 2026

ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்கம்டேக்ஸ் இந்தியா பைலிங் என்ற இணையதளத்திற்கு சென்று அல்லது புதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8-வது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img